இந்தியா

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிரான மனுவை நிராகரிக்க வேண்டும்; மத்திய அரசு சொன்ன காரணம்

DIN

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிரான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனுவில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இத்திட்டம் பொது சொத்துகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு நவம்பர் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில், "மனுதாரர் குறிப்பிட்டுள்ள மனையை பாதுகாப்புத்துறை அமைச்சகம் 90 ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவை திறக்கப்பட்டதே இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT