முகப்பு
இந்தியா

பாஜகவிலிருந்து மீண்டும் திரிணமூலில் இணைந்த மேற்குவங்க முன்னாள் அமைச்சர்

மேற்குவங்க மாநில முன்னாள் அமைச்சர் ராஜிப் பானர்ஜி பாஜகவிலிருந்து மீண்டும் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

மேற்குவங்க மாநில முன்னாள் அமைச்சர் ராஜிப் பானர்ஜி பாஜகவிலிருந்து மீண்டும் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

நடப்பு ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணமூலில் கட்சியில் இருந்த மூத்த நிர்வாகி ராஜிப் பானர்ஜி, பாஜகவில் இணைந்தார். டோம்ஜூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

இதையடுத்து இன்று திரிணமூல் கட்சியின் மூத்தத் தலைவரும் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் மீண்டும் திரிணமூல் கட்சியில் இணைந்தார். 

அதுபோல, திரிபுரா பாஜக முன்னாள் எம்எல்ஏ ஆஷிஷ் தாஸும் இன்று திரிணமூலில் இணைந்தார். இதன்பின்னர் பேசிய ஆஷிஷ் தாஸ், 'மக்களுக்கு வேலை செய்யவே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், பாஜகவினர் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில்லை. அதுமட்டுமின்றி பிரதிநிதிகளை வேலை செய்யவும் விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக நான் பாஜகவுக்கு எதிராகவே பல போராட்டங்களை நடாத்தியுள்ளேன். தற்போது என்னுடைய மக்களுக்கு சேவை செய்யவே இக்கட்சிக்கு வந்துள்ளேன்' என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →