கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் மீண்டும் கொடூரம்: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தில்லியில் நான்கு வயது குழந்தையை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக வெளியாகியச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தில்லியில் நான்கு வயது குழந்தையை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக வெளியாகியச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி பாபா நகர் பகுதியில் நான்கு வயது குழந்தையை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகே உள்ள வீட்டின் வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பு, "இனிப்பு வழங்குவதாகக் கூறி வீட்டிற்குள் அழைத்து குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்" என தெரிவித்தது. 

வீட்டிற்கு சென்ற பிறகு இச்சம்பவம் குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செயயப்பட்டதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!

பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

SCROLL FOR NEXT