கோப்புப்படம் 
இந்தியா

அசாமில் கரோனா பரவல்: முன்னெச்சரிக்கையாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அசாம் மாநிலத்தில் இரவுநேரப் பொதுமுடக்கத்தை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அசாம் மாநிலத்தில் இரவுநேரப் பொதுமுடக்கத்தை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அசாமில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் 10க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் உறுதியான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தின்போது வணிகவளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT