வெள்ளத்தில் மூழ்கிய தில்லி: 19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு பதிவு 
இந்தியா

வெள்ளத்தில் மூழ்கிய தில்லி: 19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு பதிவு

19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவால் தலைநகர் தில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

DIN

19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவால் தலைநகர் தில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

தில்லியில் செப்டம்பர் மாதத்தின் சராசரி மழையளவு 125.1 மி.மீ. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும்  இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் செப்டம்பர் மாதத்தின் 90 சதவிதமான மழையானது புதன்கிழமை ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர மழைப்பொழிவின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT