முகப்பு
இந்தியா

கேரளம் : போலி துப்பாக்கி உரிமம் தயாரித்த 5 பேர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர்  கைது செய்திருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கேரளம் : காஷ்மீரைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கைது
பகிர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர்  கைது செய்திருக்கிறார்கள்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடந்த ஆறு மாதமாக திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையை செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று (செப்-1)  காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி அவர்களை பரிசோதனை செய்தபோது போலி துப்பாக்கி உரிமம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று (செப் 2) அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்கள்.

மேலும் கைதானவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கைதானவர்கள் -சவுகத் அலி , சுகுர் அகமது , குல்சமன், முஸ்தாக் உசைன் மற்றும் முகமது ஜாவித்  

முழு கட்டுரையைப் படிக்க →