மேற்கு வங்க வன்முறை: எஸ்ஐடி-க்கு உதவ 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) உதவும் வகையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் சௌமென் மித்ரா, சுமன் பாலா சாஹு மற்றும் ரன்வீர் குமார் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அமைத்தது.
இதையும் படிக்க | நாரதா லஞ்ச ஊழல் வழக்கு: 2 அமைச்சர்கள் உள்பட 5 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்
இந்த நிலையில் எஸ்ஐடியின் விசாரணைக்கு உதவும் வகையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து மேற்கு வங்க உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.