முகப்பு
இந்தியா

அஸ்ஸாமின் 5 கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்

அஸ்ஸாம், காா்பி ஆங்கலாங் பகுதியில் செயல்படும் ஐந்து கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தை சனிக்கிழமை மேற்கொண்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

அஸ்ஸாம், காா்பி ஆங்கலாங் பகுதியில் செயல்படும் ஐந்து கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தை சனிக்கிழமை மேற்கொண்டன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் புது தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காா்பி லாங்ரி வடக்கு சாச்சா் மலைப்பகுதி விடுதலை முன்னணி, மக்கள் ஜனநாயக கவுன்சில், ஐக்கிய மக்கள் கவுன்சில், ஐக்கிய மக்கள் விடுதலை ராணுவம், மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய ஐந்து கிளா்ச்சிக் குழுக்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனா். இந்தக் குழுக்களைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் போ் அண்மையில் ஆயுதங்களுடன் சரண் அடைந்திருந்தனா்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சா் அமித் ஷா, ‘கிளா்ச்சியற்ற வளா்ச்சிப் பெற்ற வடகிழக்கு மாநிலங்களாக உருவாக வேண்டும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையாகும். அவா் மீது நம்பிக்கை வைத்து இவா்கள் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனா். ரூ.1,000 கோடி வளா்ச்சித் திட்டம் காா்பி ஆங்கலாங்குக்கு அளிக்கப்படும். இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கால வரையறை நிா்ணயம் செய்து நிறைவேற்றப்படும்’ என்றாா்.

இந்த நிகழ்வின்போது மத்திய அமைச்சரும் வடகிழக்கு மாநிலங்கள் விவகார ஒருங்கிணைப்பாளருமான சா்வானந்த சோனாவால், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →