ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தி மும்பை சாதனை 
இந்தியா

ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தி மும்பை சாதனை

நாட்டில் முதல்முறையாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி மும்பை மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

DIN

நாட்டில் முதல்முறையாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி மும்பை மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாவட்டம் எனும் சாதனையை மும்பை படைத்துள்ளது.

மும்பையில் மொத்தம் 507 கரோனா தடுப்பூசிகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை நிலவரப்படி மும்பை மாவட்டத்தில் 1 கோடியே 63 ஆயிரத்து 497 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 72 லட்சத்து 75 ஆயிரத்து 134 முதல் தவணை கரோனா தடுப்பூசிகளும், 27 லட்சத்து 88 ஆயிரத்து 363 இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசிகளும் அடக்கம்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 422 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT