முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 26,701 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 26,701 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 26,701 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,55,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 26,701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக கோழிக்கோட்டில் 3,304, திரிச்சூரில் 3,195, எர்ணாகுளத்தில் 2,887 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,47,791 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 74 பேர் பலியாகியுள்ளனர். 

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 21,496 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 28,900 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,37,996 ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 6,24,301 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.