முகப்பு
இந்தியா

கர்நாடகம் : இணைய சூதாட்டத்திற்குத் தடை

கர்நாடகத்தில் அதிகரித்து வரும் இணைய சூதாட்டம் காரணமாக பல பண மோசடி வழக்குகள் பதிவாகி வருவதால் அம்மாநில அரசாங்கம் இணைய சூதாட்டத்திற்குத் தடை விதிக்க உள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2021 at 11:24 AM
கர்நாடகம் : இணைய சூதாட்டத்திற்குத் தடை
பகிர்:

கர்நாடகத்தில் அதிகரித்து வரும் இணைய சூதாட்டம் காரணமாக பல பண மோசடி வழக்குகள் பதிவாகி வருவதால் அம்மாநில அரசாங்கம் இணைய சூதாட்டத்திற்குத் தடை விதிக்க உள்ளது.

சமீப காலமாக இணைய வழி சூதாட்டதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதனால் ஏற்படும் பண மோசடிகளும் அதிகரித்து வருகிறது. 

அதன் காரணமாக கர்நாடக மாநிலம் இணைய சூதாட்டத்திற்கு காவல்துறை தடைச் சட்டம் , 1963 -ன் படி தடை விதிக்க உள்ளது.

தடை குறித்த சட்ட வரைவை சட்டமன்றத்தில் வரும் செப்-13 முதல் செப்-24 வரை விவாதிக்க உள்ளனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை (செப்-4) இணைய விளையாட்டுகளுக்கு கைபேசி மற்றும் கணினிகளிலிருந்து பணம் அனுப்புவது தடை செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.