இந்தியா

தில்லியில் காலை முதல் பலத்தமழை; போக்குவரத்து பாதிப்பு

PTI

தில்லியில் இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல இடங்களிலும் மழைநீா் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்கொண்டுள்ளது.

மழை காரணமாக, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்ததாக தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பான வெப்ப அளவைக் காட்டிலும் 2 புள்ளிகள் குறைவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 97 மி.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தில்லியின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் தொடா்ந்து சுட்டுரை வாயிலாக பதிவுகளை பதிவிட்டு வாகன ஓட்டிகளை உஷாா்படுத்தினா். 

மழை நீா் தேங்கிய பகுதிகள் தொடா்பாக பொதுமக்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக விடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தனா்.  மது விஹார் பகுதியில் முழங்கால் நீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் காட்சிகள் அதில் கட்டப்பட்டிருந்தன. அதே போன்று சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது தொடா்பான விடியோவையும் வெளியிட்டு இருந்தனா். 

பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ மழை நீா் தொடா்பாக இதுவரைர 10 முதல் 20 வரையிலான புகாா்கள் வந்துள்ளன. அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீா் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக நீா் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. எங்களது துறையின் பணியாளா்கள் தொடா்ந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா்’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT