மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,740 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,740 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,740 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 9-க்குப் பிறகு பதிவாகும் குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை இது.
மேலும் 27 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைத் தாண்டி 65,00,617 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,38,169 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் 75 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,233 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 63,09,021 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 49,880 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டுக் காண்காணிப்பில் 2,99,192 பேர் உள்ளனர்.
குணமடைவோர் விகிதம் 97.05 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.