முகப்பு
இந்தியா

ஒடிசாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் 12 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
ஒடிசாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து
பகிர்:

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் 12 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.

ஒடிசா மாநிலத்தில் கிழக்கு ரயில்வேவிற்கு சொந்தமான சரக்கு ரயில் ஒன்று கோதுமை ஏற்றிக் கொண்டு டால்ச்சர் நோக்கி சென்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 2.30 மணியளவில் ஆங்குல்- டால்ச்சர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலானது நந்திரா ஆற்றுப் பாலத்தில் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தால் கோதுமை ஏற்றி வந்த 9 ரயில்பெட்டிகள் கவிழ்ந்து ஆற்றிற்குள் விழுந்தன. எனினும் ரயில் ஓட்டுநர் மற்றும் இதர ஊழியர்கள் காயமின்றி தப்பித்தனர்.

இந்த விபத்தால் ஆங்குல்- டால்ச்சர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. விபத்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கடும் மழை காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →