இந்தியா

11 மாநிலங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

DIN

இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிகழாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உத்தர பிரதேச மாநிலம், ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் ‘சீரோடைப்-2’ என்ற தீநுண்மி மூலம் பரவத் தொடங்கியது. இந்தத் தீநுண்மியால் ஏற்படும் காய்ச்சல் அபாயகரமானதாக கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ஹரியாணா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் நிகழாண்டு ஜூலை வரை 14,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் மத்தியிலிருந்து டெங்கு பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல், காய்ச்சல் உதவி முகாம்கள் நடத்துதல், போதுமான அளவில் பரிசோதனைக் கருவிகள், மருந்துகளை இருப்புவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடா்பு அறிதல், ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதிப்படுத்துதல் தொடா்பான பணிகளுக்காக குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT