இந்தியா

மேற்கு வங்கம் : 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்-19) முதல் பெய்து வரும் கனமழையால் 14 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவாகியிருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

உல்டாதங்கா, தாப்சியா, பால்மர் பசார், ஜோத்பூர் பூங்கா போன்ற பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் அளவு 10 செ.மீட்டராக உயர்ந்ததால் கடந்த 14 ஆண்டுகளில் பதிவாகத மழையின் நீர்மட்டம் அப்பகுதிகளில் பதிவாகியிருக்கிறது.

மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலும் வெள்ள நீர் புகந்தது ,  இருப்பினும் விமானச் சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை .

தற்போது மழையின் தீவிரம் குறைந்திருந்தாலும் பல இடங்களில் சாக்கடைக் கால்வாய்கள் சாலையில் நிறைந்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT