நாட்டில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 85.60 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 85,60,81,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 34,66,84,035 இரண்டாம் தவணை - 7,34,36,483 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 15,59,65,608 இரண்டாம் தவணை - 7,35,71,780 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,94,61,207 இரண்டாம் தவணை - 5,46,03,690 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,71,245 இரண்டாம் தவணை - 88,28,268 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,48,99 இரண்டாம் தவணை - 1,48,10,221 |
| மொத்தம் | 85,60,81,527 |