முகப்பு
இந்தியா

காஷ்மீர்: பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் இன்று (செப்-28) பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்தன

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
காஷ்மீர்: பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
பகிர்:

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் இன்று (செப்-28) பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்தனர்.

கடந்த செப்-18 ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து உரி பகுதியில் ஊடுருவியத் தீவிரவாதிகளை சில நாட்களாக ராணுவத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று உரி பகுதியில் 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

பின் இருதரப்பிற்கும் ஏற்பட்ட தாக்குதலில் ராணுவத்தினர் ஒரு தீவிரவாதியை சுட்டுகொன்றனர். மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலில் 4 ராணுவ வீரர்களும் குண்டடிபட்டு   காயம் அடைந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →