பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ வழங்கியுள்ள முதல்கட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், பட்டாசு தயாரிப்பு விதிமீறல் தொடர்பான முழு அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஐ கண்டறிந்த ஆரம்பகட்ட அறிக்கைகளை மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு தயாரிக்க உதவும் பேரியம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த தனிமம் பயன்படுத்தப்படுகிறது. பட்டாசு தயாரிப்பில் ஒரு சில நிறுவனங்கள் அதிகமாக பேரியம் தனிமத்தை பயன்படுத்துவதாக முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.