முகப்பு
இந்தியா

இ-பாஸ் கட்டாயம்: தில்லி பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்

தில்லியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் போக்குவரத்திற்கும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

தில்லியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் போக்குவரத்திற்கும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது,

அதில் இரவுநேர பணிகளுக்கு செல்பவர்களுக்காக பேருந்துகள், ஆட்டோ, மெட்ரொ, டாக்ஸிகள் மற்றும் பிற போக்குவரத்துகளும் தடையின்றி இயங்கும்.

அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்களும் இயக்கப்படும். அவசியமற்ற பொருள்களை இரவு நேரங்களில் கொண்டு செல்வதற்கும், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லியினுள் வாகனங்கள் செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையே வாகனங்கள் செல்வதற்கும் தடை இல்லை. ஆனால் இ- பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →