முகப்பு
இந்தியா

ஜூலை 8-ல் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை?

ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

பிகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி போன்றோர் காலமானதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் உருவாகியுள்ளன. 

சிவசேனை, அகாலிதளம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதால், அந்த அமைச்சரவை இடங்களும் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பிகாரை சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் இடம் பெறுபவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோர் தில்லி புறப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.