நாட்டில் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
நாடு முழுவதும் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | நாட்டில் புதிதாக 43,654 பேருக்கு தொற்று: 640 பேர் உயிரிழந்தனர்
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,92,697 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 45,07,06,257 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை: மக்களவைத் தலைவர் எச்சரிக்கை
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 14,68,84,314 இரண்டாம் தவணை - 72,09,744 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 10,30,99,861 இரண்டாம் தவணை - 3,68,42,675 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,43,50,754 இரண்டாம் தவணை - 3,52,55,201 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,02,96,166 இரண்டாம் தவணை - 77,71,787 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,79,14,176 இரண்டாம் தவணை - 1,10,81,579 |
| மொத்தம் | 45,07,06,257 |