நாட்டில் புதிதாக 27,176 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,176 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,176 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 38,012 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 284 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு
இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,33,16,755 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,25,22,171 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,43,497 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 3,51,087 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது 1.05 சதவிகிதம். குணமடைவோர் விகிதம் 97.62 சதவிகிதமாக உள்ளது.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 61,15,690 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 75,89,12,277 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.