கோப்புப்படம் 
இந்தியா

ஷோபியான் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,  ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,  பாதுகாப்புப் படையினர் இரவு முழுவதும் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்லதற்காக, இன்று வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 ரோஸஸ்... ஆஞ்சல் முஞ்சால்!

பிகார் இளைஞர்களே எனக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்; போதும்! - தேஜஸ்வியின் டிஜிட்டல் பிரசாரம்

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

SCROLL FOR NEXT