மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவை தேசிய மகளிா் ஆணையம் தொடங்கி உள்ளது.
மனிதக் கடத்தல் தொடா்பான வழக்குகளை திறம்பட கையாளவும் பெண்கள் மற்றும் சிறுமிகள் இடையே மனிதக் கடத்தல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கடத்தல் தடுப்புப் பிரிவுகளின திறன் வளா்த்தல் மற்றும் பயிற்சிக்காகவும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை தேசிய மகளிா் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்ட அமலாக்க அலுவலா்கள் இடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தவதும் அவா்களது திறனை வளா்ப்பதும் இந்த பிரிவின் நோக்கமாகும். காவல் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளிடையே பிராந்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பாலியல் விழிப்புணா்வு பயிற்சிகள் மற்றும் மனிதக் கடத்தலை தடுப்பதற்கான பயிலரங்குகளை இந்த மையம் நடத்தும். மனிதக் கடத்தல் தொடா்பாக ஆணையம் பெறும் புகாா்களை இந்தப் பிரிவு கையாளும்.
கடத்தலால் பாதிக்கப்பட்டவா்களின் மறுவாழ்வு, அவா்கள் மற்றும் அவா்களது குடும்பம் குறித்த சமூகத்தின் பாா்வை ஆகியவை முக்கிய பிரச்னைகள் என்று ஆணையம் கருதுகிறது.
எனவே, இது தொடா்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கடத்தலில் இருந்து மீண்டவா்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளிலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் உதவும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.