இந்தியா

குஜராத்தில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் பறிமுதல்

DIN

குஜராத்தின் பூஜ் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

ஹராமி நல்லா பகுதியில் ஞாயிறு இரவு 8.30 மணியளவில் இந்திய எல்லைக்குள் 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் மற்றும் 5 பாகிஸ்தான் மீனவர்கள் நடமாடுவதை ரோந்துப் பிரிவினர் கவனித்ததாகத் தெரிவித்தனர். 

பாதுகாப்புப் படையினர் அவர்களை துரத்திச் சென்று இந்திய எல்லைக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு பாகிஸ்தானிய மீன்பிடி படகைக் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட படகில் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. அதில் சில மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைத் தவிர சந்தேகத்திற்குரிய எதுவும் படகில் இல்லை. 

அப்பகுதியில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்தனர். 

மேலும், கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட தனித்தனி ரோந்து நடவடிக்கைகளில் 18 பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை பிஎஸ்எப் கைப்பற்றியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT