நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இரு அவைகளிலும் இன்று காலை அலுவல்கள் தொடங்கிய நிலையில், மக்களவையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விவகாரம் குறித்து பேச திமுக எம்.பி.க்கள் அனுமதி கோரினார்.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
ஆனால், அவைத் தலைவர், இதுகுறித்து பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில், அதனைக் கண்டித்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.