இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் பகல் 12 வரை மக்களவை ஒத்திவைப்பு

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரத்தை விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மக்களவையில், வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகியவற்றின் விலை தொடா்ந்து உயா்த்தப்படுவது தொடா்பாக விவாதிக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினா்கள் அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவைக் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பாக விவாதிக்க அனுமதிக்குமாறு அவா்கள் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினா்.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT