இந்தியா

5ஜி சேவைக்குப் பிறகு ரயில்களில் இணைய சேவை: மத்திய அரசு

DIN

நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் புதன்கிழமை அளித்த பதில்:

இந்திய பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 4ஜி தொலைத்தொடா்பு வலையமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4ஜி சேவைக்கான 6,000 கைப்பேசி கோபுரங்களை உடனடியாக வாங்கும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னா் மேலும் 6,000 கோபுரங்களை வாங்கவுள்ளது. நாடு முழுவதும் 4ஜி சேவைக்காக மொத்தம் 1 லட்சம் கோபுரங்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

தற்போது 100 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடா்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

SCROLL FOR NEXT