இந்தியா

ஒமைக்ரானுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கோவேக்ஸின்: ஐசிஎம்ஆர் ஆய்வு

DIN

புதுதில்லி:  கோவேக்ஸின் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு, கரோனா வைரஸின்  வகைகளான பீட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகியவற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க  அளவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஐசிஎம்ஆர்(ICMR) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நோயிலிருந்து மீண்ட நபர்கள் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திய பிறகு குறிப்பிடத்தக்க  அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

கோவேக்ஸின் 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, கோவேக்ஸின் இரண்டாவது தவணை செலுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கரோனா நோய்க்கு எதிராக சிறந்த பாதுகாப்பை கோவேக்ஸின்  வழங்குகிறது என்று என்ஐவி புனேவின் மூத்த விஞ்ஞானியும் ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் பிரக்யா யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கோவேக்ஸின் தடுப்பூசி, ஒமைக்ரானுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தபோதிலும், கடுமையான நோய் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT