முகப்பு
இந்தியா

ரஜௌரியில் பள்ளி மாணவிகளை சரமாரியாக அடித்த ஆசிரியர் இடைநீக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் இரண்டு சிறுமிகளை அடித்ததற்காக பள்ளி ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு சிறுமிகளை அடித்ததற்காக பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுரியன் பஞ்சாயத்து டிராம்மன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார் நிசார் அகமது. இவர் மாணவிகள் இருவரை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதற்கிடையில், மாவட்ட நிர்வாகம் மறு உத்தரவு வரும் வரை அகமது பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கக் கூடுதல் துணை ஆணையர் கோட்ரங்காவை விசாரணை அதிகாரியாகத் துணை ஆணையர் நியமித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →