நாடாளுமன்றம் 
இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று நிறைவு

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் இன்றுடன் நிறைவுபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் இன்றுடன் நிறைவுபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31-ஆம் தொடங்கி, பிப்ரவரி 1-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-இல் நிறைவடைந்தது.

அதன்பின்னா், துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளை ஆராய இடைவெளி விடப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மாா்ச் 14-இல் தொடங்கியது. ஏப்ரல் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கூட்டத்தொடா் நடைபெறும் என அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முக்கிய மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால், அவைத் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில், இரு அவைகளையும் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையுடன் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் தில்லி மாநகராட்சி திருத்த மசோதா, குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

SCROLL FOR NEXT