சஞ்சய் ரெளத் 
இந்தியா

‘மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக முயற்சி’: சிவசேனை எம்பி குற்றச்சாட்டு

மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், “மும்பையை யூனியன் பிரதேசமாக்குவது குறித்து மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது எனத் தெரிவித்தார்.

இதற்காக மாதிரி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு நிதிவசூலும் நடைபெற்று வருவதாக சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களாக ரகசியக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை நிரூபிக்க என்னுடம் ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரித் சோமையாவை குற்றம்சாட்டிய சஞ்சய் ரெளத் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர பாஜக திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கவனம் கொண்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

தெரியாத எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ்! 97,000 ரூபாய் கொள்ளை! | Cyber Shield | Cyber Crime

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - திருமா

பிரான்ஸ் அபார வெற்றி: சாதனை படைத்த எம்பாப்பேவுக்கு காயம்!

SCROLL FOR NEXT