இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு  ஷாபாஸ் ஷெரீஃப் வேட்புமனு தாக்கல்

DIN

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் புதிய பதவிக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் மூலம் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, கடந்த 50 ஆண்டுகளில் பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் இம்ரான் கான்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியுற்றதால், அந்நாட்டின் பிரதமராக ஒருவரை எதிர்கட்சி தேர்வு செய்யலாம். அதன் மூலம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எதிர்கட்சியால் ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும், அந்த தேதிக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் (70) புதிய பிரதமருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) இணைத் தலைவருமான ஆசிஃப் அலி சர்தாரி, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு ஷெபாஸின் பெயரை முன்மொழிந்தார். இவரின் ஆதரவாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களான கவாஜா ஆசிப் மற்றும் ராணா தன்வீர் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

இம்ரான் கானின் பிடிஐ கட்சியின்  65 வயதான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை புதிய பிரதமர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT