இந்தியா

குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலை: பிரதமா் மோடி இன்று திறந்து வைக்கிறாா்

DIN

ஹனுமன் ஜெயந்தி சனிக்கிழமை (ஏப். 15) கொண்டாடப்படும் நிலையில் குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் திறந்து வைக்க இருக்கிறாா்.

அங்குள்ள மோா்பி நகரில் கேசவானந்த் ஆசிரமத்தில் இந்த பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மோா்பி நகரில் அமைந்துள்ளது இரண்டாவது சிலையாகும். இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குஜராத் முதல்வா் பூபேந்தா் படேல் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்கின்றனா்.

முதலாவது சிலை நாட்டின் வடக்குப் பகுதியான சிம்லாவில் 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தெற்கே ராமேசுவரத்தில் சிலை நிறுவும் பணி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியுடன் அண்மையில் தொடங்யது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT