தில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா 
இந்தியா

‘எங்களைக் கண்டு அச்சம்’: ஹிமாச்சலப் பிரதேச அரசின் அறிவிப்புகளை விமர்சித்த ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சிக்கு அச்சப்பட்டே பாஜக அரசு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதாக தில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

DIN

ஆம் ஆத்மி கட்சிக்கு அச்சப்பட்டே பாஜக அரசு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதாக தில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள செளகானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 75வது ஹிமாச்சல் தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் கட்டணத்திலிருந்து விலக்கு, 125 யூனிட் மின்சார நுகர்வோருக்கு மின்கட்டணம் ரத்து, மகளிருக்கு 50 சதவிகித பேருந்து கட்டண சலுகை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். 

நடப்பாண்டு இறுதியில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசின் அறிவிப்புகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ”மக்களுக்கு எந்த வசதியையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. ஆம் ஆத்மிக்கு அச்சப்பட்டு அரவிந்த் கெஜரிவாலின் திட்டங்களை பாஜக காப்பியெடுத்துள்ளது” என விமர்சித்தார்.

ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழாக் காலம்... பிரணிதா!

சிரிக்கும் செவ்வானம்... ஐரா தயானந்த்!

நட்சத்திரங்களுக்குக் கீழே கருஞ்சிவப்பில்... ஆர்த்தி!

கார் மோதியதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள், மன்னிப்புக் கேட்கிறேன்! - திருமா

சாதிப் பெயர்களை நீக்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்! - தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT