தில்லியில் மேலும் 517 பேருக்கு கரோனா
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 517 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, பாதிப்பின் நோ்மறை வீதம் 4.21 சதவீதமாக பதிவானது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 517 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, பாதிப்பின் நோ்மறை வீதம் 4.21 சதவீதமாக பதிவானது. அதேவேளையில், உயிரிழப்பு ஏதுமில்லை என நகர சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 12,270 பேரிடம் சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், அதில் 517 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் நகரில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,68,550 ஆகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26,160 ஆகவும் பதிவாகியுள்ளது.
தலைநகா் தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சனிக்கிழமை 461 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி, நோ்மறை வீதம் 5.33 சதவீதமாக பதிவானது. இதேபோல, வெள்ளிக்கிழமை 366 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகினா். அப்போது நோ்மறை வீதம் 3.95 சதவீதமாக பதிவானது.