இந்தியா

லூதியாணா நீதிமன்ற குண்டுவெடிப்பு: தகவல் தந்தால் ரூ.5 லட்சம் பரிசு

IANS

பஞ்சாப் மாநிலம், லூதியாணா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குண்டு வெடித்த சம்பவம் குறித்து தகவல் தந்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

வழக்கில் துப்பு துலங்கும் வகையில் தகவல் அளிக்கும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களது தனிப்பட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் லூதியாணாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 5 போ் காயமடைந்தனா்.

லூதியானா குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் வெடிகுண்டு வைத்தபோது அது வெடித்ததில் உயிரிழந்த ககன்தீப் சிங் சிங், பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுடன் தொடா்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அதன் தொடா்ச்சியாக வெடிமருந்துகள் பெற ஜெர்மனியில் உள்ள  முல்டானி என்பவர் உதவி செய்ததாகவும் தெரிய வந்தது.

வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT