முகப்பு
இந்தியா

உலக சுகாதார நிறுவன தலைவருக்கு புதிய பெயர் சூட்டிய மோடி

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோமின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு புதிய குஜராத்தி பெயரை சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
'பக்கா குஜராத்தி ஆகிவிட்டேன்': உலக சுகாதார நிறுவன தலைவருக்கு புதிய பெயர் சூட்டிய மோடி
பகிர்:

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோமின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு புதிய குஜராத்தி பெயரை சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

குஜராத்தில் பாரம்பரிய மருத்துவ மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ், குஜராத்தில் தங்கியுள்ளார்.

இன்று காந்திநகரில் நடைபெற்ற சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் டெட்ரோஸ் அதனோம் கலந்து கொண்டார். அப்போது, நரேந்திர மோடியிடம், நான் பக்கா குஜராத்தி ஆகிவிட்டேன். எனக்கு குஜராத்தி மொழியில் ஒரு பெயர் சூட்டுங்கள் என்று விருப்பத்தோடு கேட்டுக் கொண்டார். அதற்கு பிரதமர் மோடியோ, உங்களை துளசிபாய் என்று அழைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து, நாட்டு மக்கள் பாரம்பரியமாக துளசி செடியை எவ்வாறு வழிபாட்டு வருகிறார்கள் என்றும் பிரதமர் மோடி அவருக்கு விளக்கம் அளித்தார்.

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தலைவர் எனக்கு எப்போதுமே ஒரு சிறந்த நண்பர். அவர் எப்போதுமே கூறுவார், எனக்கு இந்திய ஆசிரியர்கள் பலரும் பாடம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன். இன்று அவர் என்னிடம் கூறினார், நான் ஒரு பக்கா குஜராத்தியாகிவிட்டேன். எனக்கு குஜராத்தி மொழியில் ஒரு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனால் நான் அவரை துளசிபாய் என்ற குஜராத்தி பெயரிட்டு அழைக்கவே விரும்புகிறேன்.  துளசி செடி ஒரு மூலிகை, தற்போதைய தலைமுறையினர் அதனை மறந்துவிட்டார்கள். பல தலைமுறையாக அதனை நாம் வழிபட்டு வந்துள்ளோம். துளசியை திருமண நிகழ்ச்சிகளில்கூட பயன்படுத்துவார்கள். அதனால்தான் இன்று நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் என்று கூறினார்.

நாட்டுக்கு வந்து பாரம்பரிய மருத்துவத்தின் கீழ் சிகிச்சை பெற விரும்புவோருக்கு என விரைவில் ஆயுஷ் விசா வழங்கும் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →