முகப்பு
இந்தியா

ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் 400-ஆவது பிறந்த நாள்: இன்று செங்கோட்டையில் பிரதமா் மோடி உரை

ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் 400-ஆவது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஏப். 21) இரவு 9.15 மணிக்கு தில்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் 400-ஆவது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஏப். 21) இரவு 9.15 மணிக்கு தில்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

மேலும், ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமா் மோடி வெளியிடுகிறாா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழுவுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இரண்டு நாள் (ஏப். 20, 21) நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாடகா்களும் குழந்தைகளும் ‘ஷாபாத் கீா்த்தனையில்’ பங்கேற்பாா்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குரு தேஜ் பகதூரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பிரம்மாண்ட ஒளி - ஒலி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சீக்கியா்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ’கட்கா’வும் நடைபெறுகிறது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூரின் போதனைகளை எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். உலக வரலாற்றில் மதம், மனிதநேயம், லட்சியம், கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்தவா் இவா். முகலாய ஆட்சியாளா் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், காஷ்மீரி பண்டிட்டுகளின் மத சுதந்திரத்தை ஆதரித்ததற்காக அவா் தூக்கிலிடப்பட்டாா். ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் 24-ஆம் தேதி தேஜ் பகதூரின் நினைவு தினம் ‘ஷஹீதி திவஸ்’ என்று நினைவுகூரப்படுகிறது. தில்லியில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப், குருத்வாரா ரகாப் கஞ்ச் ஆகியவை அவரது தியாகத்தைப் பறைசாற்றுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →