தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 14.12 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15.29 லட்சம் சந்தாதாரர்கள் கூடுதலாக இணைந்த நிலையில், இம்மாதம் சற்று குறைந்துள்ளது.
2022 பிப்ரவரி மாதத்திற்கான ஊதிய தகவல்களின் அடிப்படையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் கூடுதலாக 14.12 லட்சம் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 31,826 சந்தாதாரர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து மாதந்தோறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதம் இணைந்துள்ள 14.12 லட்சம் சந்தாதாரர்களில் சுமார் 8.41 லட்சம் சந்தாதாரர்கள் புதிய உறுப்பினர்கள். சுமார் 5.71 லட்சம் பேர் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் மீண்டும் சேர்ந்துள்ளனர். இவர்கள் வருங்கால வைப்பு நிதியை எடுப்பதற்கு பதிலாக பழைய கணக்கில் உள்ள வைப்பு நிதி இருப்பை புதிய கணக்குக்கு மாற்றியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் 67.49 சதவிகிதம் தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.