லக்னௌவில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி, 30 பேர் காயம்
லக்னௌவில் திருமண விழாவின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
லக்னௌவில் திருமண விழாவின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,
பிஜ்னோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நுத்ரிகேடா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீட்டில் திருமண விழா நடந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
சஷிந்திர யாதவின் பூர்வீக வீட்டின் பால்கனி அவரது மகளின் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் போது, திருமண ஊர்வலத்தை வரவேற்க பல பெண்கள் பால்கனியில் நின்று கொண்டிருந்தனர்.
இறந்தவர்கள் ஷ்ரத்தா (5), கிஷோர் திவாரி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 12 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல் அதிகாரி கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.