தில்லி ஆசாத் மாா்க்கெட்டில் பெயிண்ட் கடையில் தீ விபத்து
வடக்கு தில்லியில் ஆசாத் மாா்க்கெட்டில் அமைந்துள்ள பெயிண்ட் கடையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது
வடக்கு தில்லியில் ஆசாத் மாா்க்கெட்டில் அமைந்துள்ள பெயிண்ட் கடையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், இந்தத் தீ விபத்து குறித்து தங்களுக்கு இரவு 7.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் கடை உரிமையாளா் பா்தீப் அஹுஜா, அவரது மகன் ரவி அஹுஜா, முகமது யாசின் ஆகிய 3 பேரும் தீக்காயம் அடைந்ததாகவும், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துணை ஆணையா் (வடக்கு) சாகா் சிங் கல்சி தெரிவித்துள்ளாா்.