இந்தியா

மீண்டும் இதுபோன்ற செய்திகளா? ஏர் இந்தியாவுக்கு நல்லதில்லையே

DIN

புது தில்லி: ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. காரணம், விமானத்துக்குள் அழையா விருந்தாளியாக எலி ஒன்று சுற்றிக் கொண்டிருந்ததே காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடிரென ஒரு எலி உலாவிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊழியர்கள் அதனைப் பிடிக்க முயற்சித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி எலியைப் பிடித்த பிறகே விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாக இருந்த போது ஏர் இந்தியா விமானங்கள் குறித்து ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு செய்திகள் வெளியாகும். ஆனால், இப்போது டாடா குழுமத்தின் வசம் வந்த பிறகும் இதுபோன்ற செய்திகள் வெளியாகியிருப்பது ஏர் இந்தியா விமானப் பயணிகளை கலக்கமடையச் செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT