முகப்பு
இந்தியா

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது: அந்தோணி

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது என முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி புதன்கிழமை தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
கோப்புப்படம்
பகிர்:


காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது என முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி புதன்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

"காந்தி குடும்பத்தினர்தான் கட்சியை வழிநடத்தும் சக்தி பீடம். அவர்கள் காங்கிரஸ் சிந்தனையை வெளிப்படுத்துபவர்கள். அவர்களுக்கு 99 சதவிகித காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸை குறைத்து மதிப்பிடக் கூடாது. காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது."

காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கமானவராக அறியப்படுவர் அந்தோணி. காங்கிரஸ் கட்சியிடம் தனது பார்வைகள் குறித்த பிரசாந்த் கிஷோர் விளக்கத்தை அந்தோணி விமர்சித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்தி கிஷோர் மறுத்ததையடுத்து, அந்தோணியின் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.