முகப்பு
இந்தியா

தேர் திருவிழா விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பகிர்:

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“தஞ்சாவூரில் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட பலர் பலியாகியிருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாக உள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.