முகப்பு
இந்தியா

அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை: பிரதமா் மோடி

அனைத்து சிறாா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்காக, பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

அனைத்து சிறாா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்காக, பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. கடந்த 2 வாரங்களில் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கரோனா பாதிப்பு நிலவரத்தை சா்வதேச அளவிலும் தேசிய அளவிலும் நமது விஞ்ஞானிகள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள். அவா்கள் தரும் ஆலோசனைகளின்படி கூட்டாக இணைந்து நாம் செயல்பட வேண்டும்.

தொடக்கத்தில் இருந்தே கரோனா பரவலைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். அதையே தற்போதும் கடைப்பிடிக்க வேண்டும். பரிசோதனை செய்தல்-தொடா்பறிதல்-நோயைக் குணப்படுத்துதல் என்ற செயல்திட்டத்தை நாம் தொடா்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தீவிரமான சளிக் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்யப்பட வேண்டும். கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்புக் கேடயமாக தடுப்பூசிகள் உள்ளன. எனவே, தகுதியுடைய அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்காக, பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து பெற்றோருக்கும் சிறாா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய அளவில் மருந்துகளையும், மருத்துவப் பணியாளா்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியாவில் 6-12 வயது வரையிலான சிறாா்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியையும், 5-12 வயது வரையிலான சிறாா்களுக்கு பயாலஜிகல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியையும் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →