முகப்பு
இந்தியா

காஷ்மீர்: இந்தாண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கும் வகையில் இந்தாண்டு துவக்கம் முதலே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சோதனையின்போது நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இதில் 32 பயங்கரவாதிகள் கடந்த 3 மாதத்தில் சுடபட்டவர்கள் என காஷ்மீர் காவல்துறைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமான ஷோபியன், பரமுல்லா மாவட்டங்களில் அடிக்கடி பாதுக்காப்புப் படையினர் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.