இந்தியா

தில்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியது!

DIN

தில்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியது. 

தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றி வருகிறார். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். 

இதில் நாட்டில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டுள்ளார். 

முன்னதாக, நேற்று(வெள்ளிக்கிழமை) தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 39-ஆவது தலைமை நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. சுமார் 6 ஆண்டுகள் கழித்து இந்த இரு மாநாடுகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT