முகப்பு
இந்தியா

நிதியமைச்சரின் பேச்சால் அதிருப்தி: காங்கிரஸ் வெளிநடப்பு

விலைவாசி உயர்வு குறித்த நிர்மலா சீதாராமன் உரையை புறக்கணித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:


விலைவாசி உயர்வு குறித்த நிர்மலா சீதாராமன் உரையை புறக்கணித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து திங்கள் கிழமை வெளிநடப்பு செய்தனர்.

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டவை குறித்த விவாதத்தில் மக்களவையில் பதிளித்து நிர்மலா சீதாராமன் பேசினார். 

அப்போது அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பணவீக்கம் இல்லை என நிதியமைச்சர் கூறுகிறார். மக்கள் கவலையில் இல்லை என்பதைப்போன்று அவரது பேச்சு உள்ளது. நாட்டில் 140 கோடி மக்களின் குரலை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்றால், அதை ஏன் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், விவாதத்தில் எழுப்பப்படும் கேள்வுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என கடந்த 10 நாள்களாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் இன்று விவாதம் நடைபெற்று, நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். எனினும் உரையின் மீது எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →